1971-ல் நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் போருக்குப் பின்னர் இந்திய பொருளாதாரம் கடும் நெருக்கடியை சந்தித்தது. போர் செலவுகள் அரசு கருவூலத்தை அழித்தது. 2 ஆண்டுகள் கழித்து 1973-74ல் அப்போதைய நிதியமைச்சர் யஷ்வந்த்ராவ் சவான் சமர்ப்பித்த பட்ஜெட் அதிர்ச்சியளிக்கும் வகையில் இருந்தது. ரூ.550 கோடி நிதி பற்றாக்குறையை பட்ஜெட் வெளிப்படுத்தியது. இந்திய பொருளாதாரத்தின் ஆபத்தான நிலையை அந்த பட்ஜெட் அம்பலப்படுத்தியது. எனவே இது இந்தியாவின் ‘கருப்பு பட்ஜெட்’ என விமர்சிக்கப்பட்டது.