ரஞ்சி கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் வீரர் சர்துல் தாக்கூர், மேகாலயா அணிக்கு எதிரான ஆட்டத்தில், முதல் ஓவரை வீசி அந்த அணியின் தொடக்க வீரர் நிஷாந்த சக்கரபோத்தியை டக் அவுட் ஆக்கினார். பின்னர் மூன்றாவது ஓவரில் அபாரமாக பந்து வீசி அனிருத்,சுமித் குமார், சஸ்கிராப் ஆகியோரை அடுத்தடுத்து டக் அவுட் ஆக்கி ஹாட்ரிக் சாதனையை நிகழ்த்தினார். இதன் மூலம் ரஞ்சி கிரிக்கெட் வரலாற்றில் மும்பை அணிக்காக ஹாட்ரிக் சாதனை நிகழ்த்திய ஐந்தாவது பவுலர் என்ற பெருமையை அவர் பெற்றார்.