விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனை சீமான் சந்தித்து உண்மை. ஆனால் புகைப்படம் வழங்கப்படவில்லை. பயிற்சிகள் ஏதும் தரப்படவில்லை என விடுதலை புலிகள் அறிவித்துள்ளது. எல்டிடிஇ அமைப்பின் பொறுப்பாளர் தமிழ்வேந்தன் என்பவர் பெயரில் வெளியாகியுள்ள அறிக்கையில், "சீமானுக்கோ விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கோ எந்தவித தொடர்பும் இல்லை என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ்த் தேசியம் என்ற பெயரில் பணம் வசூலிக்கும் நடவடிக்கைகளுக்கு புலம்பெயர்த் தமிழர்கள் நிதி வழங்க வேண்டாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.