திருவள்ளூர் நகரின் முக்கிய சாலையான சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலை சிவிநாயுடு சாலையில் நித்ய அமிர்தம் சைவ உணவகம் உள்ளது, இந்நிலையில் திருவாலங்காடு, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரின் மகனும் வழக்கறிஞருமான, விஷ்ணுவரதன், என்பவர் உறவினர்களுடன் ஓட்டலில் சாப்பிட வந்துள்ளார். அப்போது சாப்பிடுவதற்கு தேவையான உணவு வகைகளை ஆர்டர் செய்த போது, சப்ளை செய்யும் பணி பெண் ஒருவர் இவ்வளவு ஆர்டர் தர்றீங்களே. பணம் இருக்கா என கேட்டுள்ளார். வழக்கறிஞர் விஷ்ணுவரதன் கருப்பு நிற பனியன், கருப்பு நிற பேண்ட் அணிந்திருந்ததால், அவர் உடையை பார்த்து அவரை அவமதிக்கும் வகையில் பேசியதாக கூறி, விஷ்ணுவரதன் ஓட்டலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இது குறித்து ஓட்டல் நிர்வாகம் சார்பில் காவல்துறைக்கு அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து காவல்துறையினர் விஷ்ணுவரதனிடம்,
விசாரணை செய்தனர். அப்போது, சாப்பிடுவதற்காக ஆர்டர் செய்ததாகவும், அப்பொழுது
சப்ளை செய்யும் பெண் ஒருவர் என் உடையை பார்த்து என்னை அவமதிக்கும் வகையில், இவ்வளவு ஆர்டர் தர்றீங்களே. உங்களிடம் பணம் இருக்கா என கேட்டதாகவும், ஹோட்டலில் அமைந்திருந்தவர்களுக்கு முன்பாக தன்னை
அவமதித்ததால் ஆத்திரமடைந்து நான் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்.