அம்பத்தூர் - Ambattur

ஆவடி: ஒரே நேரத்தில் காணாமல் போன 4 சிறுவர்களை மீட்ட போலீசார்

ஆவடி அடுத்த அயப்பாக்கம் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் சிறுவர்கள் பிரகின், லோகித், ஹரிஷ் குமார், கௌசிக், ஆகிய 4 17 வயது சிறுவர்கள் காணாமல் போயினர். பெற்றோர்கள் சிறுவர்கள் வந்து விடுவார்கள் என எதிர்பார்த்த நிலையில், காணாமல் போனவர்கள் இரவு 8 மணி வரை வரவில்லை. இதனால் சிறுவர்களின் பெற்றோர்கள், புகைப்படத்துடன் திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.  புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் தனிப்படை அமைத்து சிறுவர்களை தீவிரமாக தேடி வந்தனர். அப்போது குடியிருப்பின் நுழைவாயில் இருந்து ஒன்றாக வெளியே சென்ற சிறுவர்கள் அங்கிருந்து ஆட்டோ மூலம் கிளாம்பாக்கம் சென்றனர். கிளாம்பாக்கத்தில் இருந்து மதுரை வழியாக சிறுவர்கள் கொடைக்கானல், வத்தலகுண்டுவில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்து சென்ற போலீசார் பேருந்து நிலையத்தில் காத்திருந்த 4 சிறுவர்களை மீட்டனர்.  அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், தீபாவளிக்கு முன்பாக சிறுவர்கள் பெற்றோர்களிடம் கொடைக்கானலுக்கு அழைத்து செல்லும்படி கூறியுள்ளனர். பெற்றோர் அழைத்து செல்லாததால், வீட்டில் உள்ள 13 கிராம் நகை மற்றும் 3000, 700, 400 ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு சென்றுள்ளனர். நான்கு சிறுவர்களையும் அதிரடியாக மீட்ட தனிப்படை போலீசார், ஆவடிக்கு பேருந்து மூலம் அழைத்து வருவார்கள் என ஆவடி காவல் உதவி ஆணையர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

வீடியோஸ்


కొమరంభీం జిల్లా