சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 16.60 ஏக்கர் பரப்பளவில் ரூ.12.60 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள போரூர் ஈரநிலை பசுமை பூங்கா, சென்னை, அம்பத்தூர், பானு நகரில் 1.80 ஏக்கர் பரப்பளவில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படவுள்ள விளையாட்டு மைதானம், ரூ.12 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அம்பத்தூர் எஸ்டேட் புதிய பேருந்து நிலையத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே. சேகர்பாபு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.