அரசுத்திட்டங்களை தொடங்கி வைக்கவும், ஆய்வுப் பணிகளுக்காகவும் நவ., 15 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரியலூர் வருகை தரவுள்ளார். அரியலூர் தனியார் திருமண மண்டபத்தில் இன்று (நவ., 07) நடைபெற்ற திமுக செயலர்கள் கூட்டத்தில் போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது, மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணித்திட்ட பணிகளை தொடங்கி வைப்பதற்காக முதல்வர் 15ஆம் தேதி வருகிறார் என்றார்.