ஆவடி - Aavadi

திருத்தணி: 6 சவரன் தங்க நகையை பறித்துச் சென்ற கொள்ளையன்

திருத்தணி  வ. உ. சி தெருவில் வசித்து வருபவர் கந்தசாமி. இவர் டிஜிட்டல் பேனர் தயார் செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கலாவதி வயது (55) இவர்கள் மகன் திருமணத்திற்கு அருகிலுள்ள கல்யாண மண்டபத்தில் ஏற்பாடுகள் செய்துவிட்டு கலாவதி அவரது உறவினர்களுடன் அருகில் உள்ள வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின் தொடர்ந்து வந்த இருசக்கர வாகன பைக் கொள்ளையர்கள் கலாவதியிடம் நேருக்கு நேராக நின்று அவரது கழுத்தில் இருந்த 6- சவரன் தங்கை நகையை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் மறைந்தனர். இதுகுறித்து கலாவதி திருத்தணி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் திருத்தணி போலீசார் சம்பவ இடத்தில் உள்ள சி. சி. டி. வி காட்சிகளை வைத்து பைக் கொள்ளையர்களை தேடி வந்தனர். அந்த பகுதியில் உள்ள சி. சி. டி. வி காட்சியில் கலாவதி வீட்டிற்கு நடந்து செல்வதும் பைக் கொள்ளையர்கள் பின் தொடர்ந்து வந்து நகையை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் சி. சி. டி. வி காட்சியை கடந்து செல்லும் காட்சிகள் வெளியாகி பரபரப்பாகியுள்ளது.

வீடியோஸ்


కొమరంభీం జిల్లా