அனைவரையும் முகம்சுளிக்க வைத்த தனியார் உணவக நிர்வாக அலட்சியம்

78பார்த்தது
திருவள்ளூரில்
உள்ள பிரபல தனியார் ஓட்டல் ஒன்றில் நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கானவர்கள் வந்து உணவு அருந்தி செல்கின்றனர் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்த
தனியார் ஓட்டல் நிர்வாகத்தின் அலட்சியத்தால் ஏராளமான வாகனங்கள் பொதுமக்கள் கடந்து செல்லும் நெடுஞ்சாலையில் பொங்கி வழிந்த மனித கழிவுகளின் துர்நாற்றத்தில் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர் மேலும் மாவட்ட ஆட்சியரகம் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலகம் அரசு மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் பொதுமக்களின் குடியிருப்புகளுக்கு கடந்து செல்லக்கூடிய இந்த பகுதியில் தொடர்ந்து மனித கழிவு வெளியேறியது அனைவரையும் முகம் சுளிக்க செய்தது ஹோட்டல் நிர்வாகத்தின் அலட்சியத்தால் அங்கு பணிபுரியும் ஊழியர்களை கொண்டு வெறும் கைகளால் போதிய உபகரணங்கள் இன்றி விஷ வாயு பாதிப்பு ஏற்படுத்தகூடிய மனிதக் கழிவுகளை சுத்தம் செய்து பினாயில் ஊற்றினர் இருப்பினும் வெள்ள மனப் பெருக்கெடுத்த நித்திய அமிர்தம் ஹோட்டல் மனிதக் கழிவு தொடர்ந்து பெருக்கெடுத்து ஓடியது இதனால் அவ்வழியாக சென்ற வாகனங்களிலும் துர்நாற்றம் பெற்றுக்கொண்டு காற்றில் கலந்த நாற்றம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை வீசியது இதை உரிய முறையில் அகற்றி வாகன ஓட்டிகளுக்கும் அருகில் வணிக நிறுவனங்களை வைத்துள்ளவர்களுக்கும் சுகாதார சீர்கேடு ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி