திருவள்ளூர் மாவட்டம்,
திருவள்ளூர், ஆவடி மாவட்டம் முழுவதும் தீபாவளி திருநாளை முன்னிட்டு காலை இரவு என அரசு நிர்ணயித்த நேரத்தில் பட்டாசுகளை பொதுமக்கள் வெடித்து உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர் சங்கு சக்கரம் மத்தாப்பு புஸ்வானம் ராக்கெட் வெடிகள் உள்ளிட்ட வண்ண வண்ண பட்டாசுகளை கொளுத்தி வானவேடிக்கைகளை நிகழ்த்திய பெரியோர் மற்றும் சிறியவர்கள் தீபாவளி தினத்தை உற்சாகமாக மகிழ்ச்சியுடன் கொண்டாடினர் இது ஒரு புறம் இருக்க வீடுகளில் மற்றும் தெருக்களில் செல்லமாக வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளான நாய்கள் பட்டாசு சட்டத்திற்கு பயந்து தெறித்து ஓடியது மேலும் நிறுத்தி வைத்திருந்த கார்களுக்கு மத்தியில் பயந்து ஒளிந்து கொண்டன இருப்பினும் பட்டாசின் அதிரடி வெடிச்ச சத்தத்தில் நாய்களால் தாக்குப் பிடிக்க முடியாமல் சாலைகளில் தெறித்து ஓடியன இது பார்ப்பதற்கு வேதனை தரும் நிகழ்வாக இருந்தது இதேபோன்று சாலைகளில் சுற்றி தெரியும் கால்நடைகளும் ஒன்று கூட இல்லாமல் ஊருக்கு ஒதுக்கு புறமான இடத்தை நோக்கி ஓட்டம் எடுத்தன அதிக அளவு பட்டாசுகள் சத்தத்துடன் வெடிப்பதை நாய்களால் பொறுத்துக் கொள்ள முடியாது இதனால் நாய்களுக்கு அதிக அளவு பைத்தியம் ஏற்பட்டு அச்சத்தில் வெறி பிடிக்கும் வாய்ப்பு உள்ளது பட்டாசு சத்தத்தை கேட்டு பெருக்கலில் இருக்கும் நாய்கள் படாத பாடுபட்டதை பார்த்த பொழுது மனதிற்கு வேதனை தரும் விதத்தில் அமைந்திருந்தது