மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பின்னால் சென்ற காரை வழிமறித்து தாக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அப்போது, அதிமுக நிர்வாகிகளை, அமமுக பிரமுகர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், காயமடைந்த அதிமுகவினர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்நிலையில், தற்போது தாக்குதலில் ஈடுபட்ட விவகாரம் குறித்து அமமுக பிரமுகர் பாண்டி உள்ளிட்ட மூவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.