ஆவடி அருகே சிப்காட் தொழில் பேட்டை அமைக்க 488 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த ஆரிக்கமேடு காட்டூர் வடுகர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் 800 குடும்பங்களின் வீடுகளை அகற்றிவிட்டு சிப்காட் அமைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு அமர்ந்து பொதுமக்கள் தங்களுக்கு அரசு உதவ வேண்டும் என கோரிக்கையை வலியுறுத்தி தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 10 பேரை மட்டும் ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதித்த காவல்துறையினர் தங்களுக்கு உரிய முறையில் அரசு உதவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்