அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கள ஆய்வுக் குழுவுடன் இன்று (நவ.11) ஆலோசனை நடைபெற்றது. அதில், அதிமுக கிளை, வார்டு, வட்டக் கழகங்கள் மற்றும் சார்பு அமைப்புகளின் பணிகள், செயல்பாடுகள் பற்றி நேரடியாக கள ஆய்வு செய்ய ஈபிஎஸ் உத்தரவிட்டார். அவற்றின் பணிகளை மேம்படுத்துவது தொடர்பாக கருத்துகளை வழங்குவது குறித்து ஆலோசனை மேற்கொண்டார். மேலும், வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகளை கடமை உணர்வோடு ஆற்ற வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.