மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பரவை - அதலை சாலையில் தொடர் மழையின் காரணமாக நெற்பயிர்கள் மூழ்கி அழுகியதால் விவசாயிகள் மறுநடவு பணிகளை மேற்கொண்டுள்ளனர். இவ்வழியாக செல்லும் விளாங்குடி கண்மாய் பாசன ஓடையை ஒட்டிய கடைமடை பகுதி வயல்களில் நடவு செய்த பயிர்கள் தொடர் மழைக்கு மூழ்கின. இதனால் ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வரை செலவு செய்த விவசாயிகள் அழுகிய பயிர்களை உழவு செய்து மறுநடவு பணியில் ஈடுபட்டுள்ளனர்.