திருநின்றவூர் அடுத்த நடுக்குத்தகை, கங்கை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரியாஸ் வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவர் மீது கொலை முயற்சி, கஞ்சா உட்பட 4 வழக்கு திருநின்றவூர் காவல் நிலையத்தில் நிலைவயில் உள்ளன. ரியாஸ், வீட்டின் பின்புறம் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. திருநின்றவூர் காவல் துறையினர் ரியாஸ் , உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், கொலை தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த ராபர்ட் மற்றும் ஜேம்ஸ் ஆகியோர், திருநின்றவூர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.
ராபர்ட் அவரது மனைவி அனுசியாவுடன் கருத்து வேறுபாடால் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் என் மனைவிக்கும், ரியாஸின் நண்பரான ஷியாம் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. நடுக்குத்தகை, பால்வாடி தெருவில் மது அருந்திக் கொண்டிருந்த போது மது போதையில் வந்த ரியாஸ், பயாஸ் மற்றும் ஷியாம் மூவரும், என் மனைவியின் கள்ளத்தொடர்பு குறித்து பேசியதால் இருவரும் மாறி மாறி சரமாரியாக தாக்கியதில் சம்பவ இடத்திலே ரியாஸ் உயிரிழந்தாக வாக்குமூலத்தில் கூறினர். திருநின்றவூர் போலீசார் கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.