நெல்லை: கழிவு நீர் குளத்தில் கலப்பதை தடுக்க கோரிக்கை
எஸ்டிபிஐ கட்சியின் மேலப்பாளையம் 50வது வார்டு கூட்டம் வார்டு தலைவர் பக்கீர் மைதீன் தலைமையில் நேற்று (நவம்பர் 09) நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொதுச்செயலாளர் வழக்கறிஞர் ஆரிப் பாதுஷா, தொகுதி செயற்குழு உறுப்பினர் யூசுப் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் கழிவுநீர் கன்னிமார்குளத்தில் கலப்பதை தடுக்க பாதாள சாக்கடை திட்டத்தை முழுமைப்படுத்த போர்க்கால நடவடிக்கை வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.