திருநெல்வேலி மாவட்டம் இடிந்தகரையை சேர்ந்த 28 மீனவர்கள் ஈரான் நாட்டில் மீன்பிடித் தொழில் செய்து வந்தனர். இவர்களை கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி பஹ்ரைன் நாட்டினர் எல்லை மீறி மீன் பிடித்ததாக கைது செய்தனர். அவர்களை மீட்ககோரி இன்று மாவட்ட ஆட்சியரிடம் இடிந்தகரையை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கண்ணீர் மல்க மனு அளித்தனர்.