மதுரையில் நிலுவையில் உள்ள பழைய வழக்குகளில், தலைமறைவானவர்களை பிடித்து வழக்குகளை முடிக்கும் நடவடிக்கையில் தனிப்படை போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், ஜக்காதோப்பு பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் 1997ஆம் ரூ.60 வழிப்பறி செய்து தலைமறைவாகியுள்ளார். அவர் தற்போது சிவகாசியில் குடும்பத்தோடு வசித்து வந்தது தெரியவந்தது. தொடர்ந்து அங்கு விரைந்த போலீசார் ஒயின்ஷாப்பில் பணிபுரிந்து வந்த பன்னீர்செல்வத்தை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.