திருநெல்வேலி மாவட்டம் கூட்டப்பனை மிக்கேல் ஆதிதூதர் சிற்றாலயம் சுற்றுச்சுவர் கடல் அரிப்பால் இன்று சேதமடைந்தது. இந்த சேதத்தால் மேலும் பல்வேறு இடங்கள் ஆபத்தான நிலையில் காணப்படுகின்றது. மிக்கேல் ஆதிதூதர் சிற்றாலயத்தின் சுற்றுச்சூழல் சேதமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.