திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் இன்று மதியம் 11 மணியளவில் கூடங்குளத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு சொகுசு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது கூடன்குளம் அருகே அம்பலவானபுரம் பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் காரினை ஒட்டி சென்றார். கூடங்குளம் நாகர்கோவில் சாலையில் நாகர்கோவில் வெட்டுண்ணூருணி மடத்திலிருந்து இரண்டு பெண்கள் இரண்டு குழந்தைகள் உட்பட ஐந்து பேர் வந்த மற்றொரு காருடன் கூடன்குளத்தில் இருந்து சென்ற சொகுசு கார் நேருக்கு நேர் மோதியது.
இதில் நாகர்கோவிலில் இருந்து வந்த இரண்டு குழந்தைகள் இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேரும் கூடங்குளத்திலிருந்து சென்ற காரில் இருந்த நான்கு பேரும் என 9 பேரும் காயம் அடைந்தனர். இதில் சொகுசு காரினை ஒட்டி வந்த டிரைவர் முருகனின் வலது கை முறிவு ஏற்பட்டு நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மற்ற எட்டு பேரும் சிறுசிறு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இதனால் நாகர்கோவில் கூடங்குளம் சாலையில் சிறிது நேரம்
போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சம்பவம் குறித்து அறிந்த கூடங்குளம் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்தை சரி செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து
வருகின்றனர். இந்த நிலையில்
இரண்டு சொகுசு கார்களும் நேருக்கு நேர் மோதிய காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.