உச்ச நீதிமன்றத்தில் 50வது தலைமை நீதிபதியான டி.ஒய்.சந்திரசூட், இன்றுடன் (நவ., 10) பணி ஓய்வு பெறுகிறார். நவம்பர் 9, 2022 அன்று தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட சந்திரசூட், சபரிமலை கோவில் நுழைவு, முத்தலாக், ராம ஜென்மபூமி-பாபர் மசூதி மற்றும் டெல்லி அரசு அதிகார பகிர்வு தொடர்பான பல வழக்குகளில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகளை வழங்கியுள்ளார். 2013-2016 வரை ஆண்டு வரை அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்தார்.