திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் துறையினர் இன்று பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். அதில் பேருந்தில் பயணம் செய்யக்கூடிய பயணிகள் தங்களது உடைமைகளை பாதுகாத்து கொள்ளவும், திருடர்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதால் எச்சரிக்கையாக இருக்கவும் ஒலிபெருக்கி மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதன் காரணமாக பொதுமக்கள் விழிப்புணர்வுடன் உள்ளனர்.