விருதுநகர் மாவட்டத்தில் ரூ.77 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆட்சியர் அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ., 10) திறந்து வைக்கிறார். ரூ.101 கோடியில் முடிவுற்ற திட்டப் பணிகளையும் முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார். ரூ.471 கோடியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளார். விருதுநகரில் நேற்று முதல் முதலமைச்சர் கள ஆய்வில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.