வடகிழக்குப் பருவமழை நவ., 12ஆம் தேதி முதல் சூடுபிடிக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வருகிற 12ஆம் தேதி முதல் தீவிரமாகும் என்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை தொடங்கும் எனவும் கூறியுள்ளார். சென்னையை தொடர்ந்து தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் கனமழை தீவிரமாகும் எனவும் கணித்துள்ளார்.