அர்ஜுன் சம்பத்தின் மகன் ஓம்கார் பாலாஜி கைது

79பார்த்தது
அர்ஜுன் சம்பத்தின் மகன் ஓம்கார் பாலாஜி கைது
இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தின் மகன் ஓம்கார் பாலாஜியை கோவை பந்தய சாலை போலீஸ் கைது செய்தது. ஈஷா யோகா மையம் குறித்து அவதூறு பரப்பி வருவதாக, நக்கீரன் இதழை கண்டித்து கோவையில் இந்து மக்கள் கட்சி போராட்டம் நடத்தியது. அதில் பங்கேற்ற ஓம்கார் பாலாஜி, மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக புகார் அளிக்கப்பட்டது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், குற்ற நோக்கத்துடன் செயல்படுதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி