வடக்கு அரியநாயகிபுரத்தைச் சேர்ந்த காவலர் செல்வ குமரேசன் என்பவரது வீட்டில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் அத்துமீறி நுழைந்து அரிவாளால் காரை சேதப்படுத்தி ஜன்னல் கண்ணாடியை உடைத்தும் ரகளையில் ஈடுபட்டனர். இதுகுறித்து முக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்தும் தற்போது வரை குற்றவாளிகள் பிடிப்படாத நிலையில் குற்றவாளிகள் மதுரை மாவட்டங்களுக்கு தப்பி சென்று இருக்கலாம் என்று தற்போது தகவல் வெளியாகி உள்ளது.