நெல்லை: ரூ. 104 கோடியில் புதிய பணிகள் நடப்பதாக தகவல்
நெல்லையில் மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று அளித்த பேட்டியில், ரூ. 72 கோடி 10 லட்சம் செலவில் மருத்துவக்கல்லூரிக்கான புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. பணிகள் மார்ச் மாத இறுதியில் முடிக்கப்பட்டு முதல்வரால் திறந்து வைக்கப்படும். ரூ. 104 கோடி 69 லட்சம் மதிப்பீட்டில் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் புதிய கட்டிட பணிகள் நடந்து வருகிறது என்றார்.