
கேட்ச் மிஸ் குறித்து அக்சர் படேல் கருத்து
"ரோஹித் ஷர்மா கையில் பந்து பட்டதும், நான் ஹாட்-ட்ரிக் விக்கெட் எடுத்து விட்டேன் என்றே நினைத்தேன். அதனை கொண்டாட தயாரானபோது, பந்து கை நழுவிபோனது தெரியவந்தது. அப்போது இதெல்லாம் நடப்பது இயல்புதான் என்று தோன்றியது" என வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் ஹாட்-ட்ரிக்கை தவறவிட்டது குறித்து இந்திய வீரர் அக்சர் படேல் பேசியுள்ளார். சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் இதுவரை எந்த இந்தியரும் ஹாட்-ட்ரிக் வீழ்த்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.