தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா கோகிலாபுரத்தில் இன்று 24 மனை செட்டியார் உறவின்முறை மண்டபத்தில் ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரி மற்றும் தேனி வாசன் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் முனைவர் முகமது சமீம், முகமது இஸ்ஹாக், சுரேஷ் ஆகியோர் துவக்கி வைத்தனர். கண் சிகிச்சை இலவச முகாமில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர்.