தெலங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டத்தில் உள்ள சிங்கரைப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீ நிதி (14). 10ஆம் வகுப்பு படித்துவரும் இவர், நேற்று (பிப்.20) காலை, பள்ளிக்குச் செல்லும் வழியில், பள்ளி வளாகத்திற்கு அருகில் திடீரென கடுமையான மார்பு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதனையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாணவியின் திடீர் மறைவு அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.