ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் வசிப்போருக்கு பட்டா வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டிருப்பதாக வருவாய்த்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் அறிவித்துள்ளார். சென்னையில், 60 ஆயிரம் பேருக்கும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்து 87 ஆயிரம் பேருக்கும் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படவுள்ளது. இதனால் புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் அனைவர்க்கும் இலவச பட்டா கிடைக்கும்.