இந்தியர்கள் தங்களது சம்பளத்தில் 3ல் ஒரு பங்கை இ.எம்.ஐ. செலுத்துவதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. நிதி தொழில்நுட்ப சேவைகள், வங்கி அல்லதா நிதி நிறுவனங்கள் மற்றும் பிற டிஜிட்டல் தளங்களை பயன்படுத்தும் 30 லட்சம் பேரிடம் ‘பி.டபிள்யு.சி.,’ மற்றும் ‘பெர்பியோஸ்’ நிறுவனங்கள் இணைந்து ஆய்வு செய்துள்ளன. இதில் இந்தியர்கள் தங்களது சம்பளத்தில் 39% கடனை திரும்ப செலுத்தவும், காப்பீட்டுக்கான பிரீமியத்தை செலுத்தவும் பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது.