ஒரே பைக்கில் பயணித்த 5 பேர்.. 4 பேர் உயிரிழப்பு

78பார்த்தது
ஒரே பைக்கில் பயணித்த 5 பேர்.. 4 பேர் உயிரிழப்பு
உத்தரபிரதேச மாநிலம் எடாவா மாவட்டம் துலட்பூர் கிராமத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு அனுஷ் (17), ஹிமான்ஷு (15), ராகுல் (22), பிரன்ஷு (15), ரோகித் (18) ஆகிய 5 பேரும் ஒரே பைக்கில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது, சாலையில் வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பைக்கில் பயணித்த 5 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில், படுகாயமடைந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பிரன்ஷு படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி