'கடந்த 17 ஆம் தேதி நடிகர் சிவகார்த்திகேயன் அவரது 40-வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்நிலையில், இன்று (பிப்.20) 'பராசக்தி' படக்குழுவுடன் அவர் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அதன்பின், 'பராசக்தி' படக்குழுவிற்கு பிரியாணி விருந்தும் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து, அதர்வா மற்றும் சுதா கொங்கராவுக்கு சிவகார்த்திகேயனே பரிமாறிய வீடியோவை இணையத்தில் படக்குழு பதிவிட்டுள்ளது.