பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு துப்புரவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 17 ஊராட்சிகளில் துப்புரவு பணியாளர்கள், ஓஎச்டி ஆப்பரேட்டர்கள், தூய்மை காவலர்கள் உள்ளிட்ட பணிகளில் 300க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்களுக்கு பணி நேரம் வரைமுறை படுத்த வேண்டும், பனிக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும், ஊதியத்துடன் கூடிய விடுமுறை வேண்டும், Adjust ஊதிய குழு பரிந்துரை ஊதியம் வழங்க வேண்டும் என 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் முன்பு சுமார் 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டு அரசுக்கு கோரிக்கை வைத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.