கடலூர் மாவட்டத்தில் இன்றும், நாளையும் (பிப்., 21, 22) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 600க்கும் மேற்பட்ட முடிவுற்ற திட்ட பணிகளை துவக்கி வைக்கும் அவர், 178 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். தொடர்ந்து இன்று மாலை மஞ்சக்குப்பத்தில் நடைபெறும் அரசு விழாவில் 30,000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார். முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.