இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல், கடந்த 2020ம் ஆண்டு தனஸ்ரீ என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதனிடையே சாஹல் - தனஸ்ரீ இருவரும் விவாகரத்து செய்யப் போவதாக தகவல் வெளியாகி கொண்டே இருந்தது. இந்நிலையில் நேற்று இருவரும் மும்பையில் உள்ள பாந்த்ரா குடும்ப நீதிமன்றத்தில் ஆஜராகி பரஸ்பர விவகாரத்து பெற்றதாக கூறப்பட்டுள்ளது. நீதிபதி இருவருக்கும் பரஸ்பரம் விவாகரத்து வழங்கியுள்ளார்.