போடி அருகே உள்ள ராசிங்கபுரத்தில் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி தீவிரம்தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ராசிங்கபுரம் ஊராட்சியில் வார்டுகளில் புதிய கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ராசிங்கபுரம் ஊராட்சியில் கால்வாய் மற்றும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கிராம வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நடைபெறும் இப்பணிகளை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.