
தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வீணாகும் பேட்டரி வண்டிகள்
தேனி மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் தூய்மை பணிக்காக வழங்கப்பட்ட பேட்டரி வாகனங்கள் பல மாதங்களாக ஒன்றிய அலுவலகங்களில் திறந்த வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இவைகள் வெயில், மழையில் நனைந்து சேதமடைந்து வருகிறது. மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளில் தூய்மை பணிக்காக தூய்மை பாரத இயக்கம் 2023-2024 திட்டத்தில் தலா ரூ. 2.52 லட்சம் மதிப்பிலான 103 பேட்டரி வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது