தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. தேனி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாக இந்த கும்பக்கரை அருவி அமைந்துள்ளதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் அன்றாடம் வந்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில், கடந்த சில தினங்களாக கும்பக்கரை அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான கொடைக்கானல் வட்டக்கானல் பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது. அருவிக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளது. இன்று (ஏப். 4) அருவிக்கு நீர்வரத்து அதிகரித்தது. கும்பக்கரை அருவியை பொதுமக்கள் பார்வையிடுவதற்கும், குளிப்பதற்கும் இன்று (ஏப். 4) முதல் மறு உத்தரவு வரும் வரை, தடை விதிக்கப்படுவதாக தேவதானப்பட்டி வனச்சரக அலுவலர் அன்பழகன் தெரிவித்துள்ளார். இதனால் சுற்றுலா பயணிகள் கும்பக்கரை அருவிக்கு இன்ப சுற்றுலா சென்று வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.