கும்பக்கரை அருவியில் நீர்வரத்து சீரானதால் குளிக்க அனுமதி

74பார்த்தது
கும்பக்கரை அருவியில் நீர் வரத்து குறைந்து சீரானதால் 3 நாட்களுக்குப் பின்பு சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது.

இந்த அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான வட்டக்காணல், பாம்பார்புரம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக பெய்த தொடர் கன மழையால் அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி கடந்த 4 ஆம் தேதி முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்தனர்.

இந்த நிலையில் கடந்த மூன்று தினங்களாக அருவியன் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பொழிவு குறைந்த நிலையில் கும்பக்கரை அருவியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு குறைந்து தற்பொழுது நீர் வரத்து சீரானதால் கும்பக்கரை அருவியில் 3, நாட்களுக்குப் பின் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிப்பதாக வனத்துறை அறிவித்துள்ளனர்.

கும்பக்கரை அருவியில் குளிக்க வனத்துறை அனுமதித்துள்ளதால் ஆர்ப்பரித்து கொட்டும் அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ச்சி அடைகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி