
பெரியகுளம்: வாணிப கழக கிடங்கில் கலெக்டர் ஆய்வு
தேனி மாவட்டம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் நல்லகருப்பன்பட்டி பகுதியிலுள்ள நுகர்பொருள் வாணிப கழக கிடங்கியில் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜித் சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து கிடங்கின் செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார். இதில் துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.