வருசநாடு மலைப்பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனை

77பார்த்தது
உசிலம்பட்டி தலைமைக் காவலர் முத்துக்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய கும்பலைப் பிடிக்க தீவிர வாகன சோதனை நடைபெற்றது. தேனி மாவட்டம், வருஷநாடு மலைப் பகுதியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார் வருஷநாடு மலைப் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மேலும், உசிலம்பட்டியிலிருந்து தேனி மாவட்டப் பகுதிக்குச் செல்லும் மல்லப்புரம்-மயிலாடும்பாறை மலைச் சாலை சோதனை சாவடியில் கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி