தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம் கடமலைக்குண்டு அருகே மேலப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சேர்மலை மகன் மாணிக்கம் (40 வயது). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த செந்தாயன் மகன் பிச்சைமுருகன் (36 வயது) என்பவருக்கும், முன் விரோதம் இருந்தது. இந்த நிலையில், நேற்றுமுன்தினம் (ஏப்ரல் 11) திருவிழாவில் நடைபெற்ற ஆடலும் பாடலும் நிகழ்ச்சியின்போது, மாணிக்கத்தை பிச்சைமுருகன் கத்தியால் குத்தினார்.
படுகாயம் அடைந்த மாணிக்கம் தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து கடமலைக்குண்டு போலீசார் வழக்குப் பதிவு செய்து பிச்சைமுருகனை கைது செய்தனர்.