பெரியகுளம் குடும்பத் தகராறில் அக்கா மகனை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட தாய் மாமன்
தேனி மாவட்டம் பெரியகுளம் அழகர்சாமிபுரத்தைச் சேர்ந்த பாண்டீஸ்வரன் என்பவருக்கும் அவரது அக்காவுக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில், பாண்டீஸ்வரன், அக்கா மற்றும் அக்கா மகனை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். இதில், அக்கா மகன் உயிர் இழந்தார். அக்கா பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் பாண்டீஸ்வரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பெரியகுளம் டிஎஸ்பி தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர்.