தேனி பங்களா மேட்டில் விசிக சார்பாக வக்பு சட்டத்தை திரும்பப் பெறக் கோரி நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
தேனியில் அமைந்துள்ள பங்களா மேடு பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ரபிக் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் பல்வேறு அரசியல் கட்சி மற்றும் முஸ்லிம் இயக்கங்கள் இணைந்து வக்ஃப் திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் விசிக, தமுமுக, எஸ்டிபிஐ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட, நகர நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டு தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்