ஆண்டிபட்டி இலவம் பஞ்சு அரசு கொள்முதல் செய்யக் கோரி மனு
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா உட்பட்ட வருஷநாடு பகுதியில் இலவம் பஞ்சு மரங்கள் சாகுபடி செய்யப்பட்டு வரும் நிலையில், தும்மகுண்டு பகுதியை சேர்ந்த விவசாயிகள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில், கடந்தாண்டு 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வந்த இலவம் பஞ்சு, தற்போது வெறும் 30 ரூபாய்க்கு மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனவே, விலை குறைவால், இலவம் பஞ்சை, அரசு கொள்முதல் செய்ய வேண்டும் கோரிக்கை வைத்து தேனி ஆட்சியர் ரஞ்சித் சிங்கிடம் மனு கொடுத்தனர் தெரிவித்துள்ளனர்.