ஆண்டிபட்டியில் மாணவ-மாணவிகள் ரத்ததான முகாம்
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அவசரசிகிச்சை பிரிவு நோயாளிகளுக்கு பயன்படும் வண்ணம் ரத்ததான முகாம் ஆண்டிபட்டி பாரத்நிகேதன் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. முகாமை கல்லூரி முதல்வர் அருள்குமார் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். முகாமில் கல்லூரி மாணவ மாணவிகள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.