
கும்பகோணம் பகுதியில் நெடுஞ்சாலை துறையினர் ஆய்வு
தஞ்சாவூர் கோட்டம், கும்பகோணம் உட்கோட்டத்தை சார்ந்த திருவிடைமருதூர் அருகே பூந்தோட்டம் - நாச்சியார்கோவில் சாலையை அகலப்படுத்தும் பணியை, தஞ்சாவூர் தரகட்டுப்பாடு உதவிகோட்டப்பொறியாளர் ரேணுகோபால், கும்பகோணம் உதவிகோட்டப்பொறியாளர் செந்தில்தம்பி ஆகியோர் ஆய்வு செய்தனர். உதவிப்பொறியாளர்கள் இளவரசன், அப்துல் ரஹ்மான் ஆகியோர் உடன் இருந்தனர். சுமார் 3.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4.40 கி.மீ. தூரத்திற்கு சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.