பந்தநல்லூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

77பார்த்தது
பந்தநல்லூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
திருவிடைமருதூா் நெடுஞ்சாலை உட்கோட்டத்தை சாா்ந்த வைத்தீஸ்வரன்கோவில் - கீழ் அணைக்கட்டு சாலையில் பந்தநல்லூா் பேருந்து நிலையம் எதிா்புறம் உள்ள நெடுஞ்சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அதிகம் இருந்தது. இதனால் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் ஏற்பட்டது.

நீண்ட காலமாக இதுகுறித்து பல்வேறு புகாா்கள் வந்த நிலையில் நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளா் செந்தில்குமாா், ஆக்கிரமிப்புகளை அகற்றப்போவதாகவும், முன்னெச்சரிக்கையாக தாங்களே அகற்றிக்கொள்ளுமாறு அறிவிப்பு செய்திருந்தாா். அப்போது சிலா் தாங்களாகவே அகற்றிக்கொண்டனா்.

பின்னா் திங்கள்கிழமை சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. உதவிக் கோட்டப்பொறியாளா் சிவக்குமாா் தலைமையில் இளநிலைப் பொறியாளா் கந்தன் மற்றும் சாலை ஆய்வாளா்கள் கண்ணன், பாஸ்கா், சந்திரசேகா் ஆகியோா் அளவீடுகள் செய்து ஆக்கிரமிப்பு கட்டடங்களை அடையாளம் காட்டி பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினா்.

தொடர்புடைய செய்தி